கொழும்பு: இலங்கை தேசிய தொலைக்காட்சி ‘ரூபவாஹினி’ மீண்டும் தனது ஒலிபரப்பை தொடங்கியது. மக்கள் போராட்டம் காரணமாக தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பிய நிலையில், இன்று மீண்டும் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய தொலைக்காட்சி சேனலான ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) தற்காலிக இடைநிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் ஒளிபரப்பைத் தொடங்கி உள்ளது.
இலங்கை அரசுக்கு எதிரானமக்கள் போராட்டம், இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி நிறுவன அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். மேலும், ‘அரசாங்க எதிர்ப்புப் போராட்டம்’ மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தொடர்பான செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்று கோரினர். இதனால் தொலைக்காட்சி ஒளிபரப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று அதிகாலை கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பியோடிய நிலையில், புதிய அதிபராக ரணில்விக்கிரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார். மேலும் இலங்கையில் அவசரநிலையும் பிரகடணப்படுத்தப்பட்டு உள்ளது.
இதையடுத்து, ற்காலிக இடைநிறுத்தத்திற்குப் பிறகு இலங்கைய தேசிய தொலைக்காட்சி சேனலான ரூபவாணினி (SLRC) தனது ஒளிபரப்பு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.