காற்றாலை மூலம் கிடைத்த மின்சாரத்தில் 120.25 மில்லியன் யூனிட் மின்சாரத்தை கடந்த சனிக்கிழமை அன்று தமிழ்நாடு பயன்படுத்தியுள்ளது.

இது இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் பயன்படுத்தாத சாதனை அளவாகும் என்று டான்ஜெட்கோ தலைவர் ராஜேஷ் லகோனி தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

9-7-2022 வரை இந்த மாதம் 935.74 மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரத்தை தமிழ்நாடு பயன்படுத்தி இருப்பதாவதும், முதல் முறையாக ஜூலை 3 ம் தேதி 103.96 மில்லியன் யூனிட் சாதனை அளவையும் ஜூலை 5 ம் தேதி 111.71 மில்லியன் யூனிட் அளவையும் எட்டியது.

2020 ம் ஆண்டு பயன்படுத்திய 107 மில்லியன் யூனிட் தான் இதுவரை சாதனையளவாக இருந்தது.

https://twitter.com/RajeshLakhani69/status/1546065824464912384

இந்திய காற்றாலை மின்சார சங்கத்தின் தலைவர் கஸ்தூரி ரங்கன் இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “சனிக்கிழமை தமிழ்நாட்டின் மொத்த மின் பயன்பாடு 350 மில்லியன் யூனிட்டாக இருந்தது இதில் மூன்றில் ஒரு பங்கு 120.25 மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரம் என்பதில் பெருமையாக இருக்கிறது”

முன்னதாக மின் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் கிரிட்டில் இடமில்லை என்று கூறி காற்றாலை மின்சாரத்தை தவிர்க்கும் நிலை இருந்தது. இந்த ஆண்டு அந்த பிரச்சனை இதுவரை எழவில்லை என்றும் கூறினார்.

மேலும், ஆடி மாதத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால் பயன்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.