இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி. உஷா, கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலா கோயில் தலைமை அறங்காவலர் வீரேந்திர ஹெக்கடே மற்றும் பாகுபலி, ஆர்,ஆர்,ஆர், உள்ளிட்ட பல படங்களுக்கு திரைப்பட கதாசிரியரான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விஜயேந்திர பிரசாத் ஆகிய நான்கு பேருக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர் .
உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும்
என் உளங்கனிந்த நன்றி… from Seattle, USA— Ilaiyaraaja (@ilaiyaraaja) July 6, 2022
ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருப்பதற்கு இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் இளையராஜா இதுகுறித்து ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத @ilaiyaraaja அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) July 6, 2022
முன்னதாக, இளையராஜாவுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது குறித்து, “ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்” என்று பதிவிட்டுள்ளார்.