டெல்லியில் இருந்து துபாய்க்கு இன்று காலை 8:04 மணிக்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 9:14 மணிக்கு பாகிஸ்தானின் கராச்சியில் தரையிறங்கியது.

விமானத்தின் இடது எரிபொருள் டேங்கில் இருந்து எரிபொருள் வேகமாக குறைந்து வருவதாக விமானிகளுக்கு சமிக்கை வந்ததை அடுத்து அவசர காரணங்களுக்காக கராச்சியில் தரையிறக்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற சோதனையில் எரிபொருள் டேங்கில் லீக் ஏதும் இல்லை என்பதும் எரிபொருள் இண்டிகேட்டர் சரியாக இயங்கவில்லை என்றும் தெரியவந்தது.

இதனை அடுத்து மும்பையில் இருந்து இன்று பிற்பகல் 1:30 மணிக்கு கராச்சி செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் பயணிகள் அனைவரும் துபாய் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.