சென்னை: சென்னை புறநகர் பகுதியான நாவலூரில் அமைந்துள்ள சுங்கச்சுவாடியில் ஜூலை 1ந்தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவ தாக அறிவிக்கப்பட்ட உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள சாலைகளில் சுங்க கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் திருத்தி அமைக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து கேளம்பாக்கம் செல்லும், ஓ.எம்.ஆர். சாலையில் நாவலூர் பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இனிமேல், நாவலூர் சுங்கச் சாவடியில் ஒரு முறை பயணிக்க ஆட்டோ கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.11 ஆகவும், கார் மற்றும் ஜீப்களுக்கு கட்டணம் ரூ.30ல் இருந்து ரூ.33 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் ரூ.49ல் இருந்து ரூ.54 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பஸ்களுக்கான கட்டணம் ரூ.78ல் இருந்து ரூ.86 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சுங்க கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.