சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதன் தலைமையகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ்., இபிஎஸ். தலைமையில் நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பவர்கள் செல்போன் வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டதால், மூத்த தலைவர் மைத்ரேயன் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியேறினார். அதேவேளையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று அதிமுக தலைமையம் எதிரே சிலர் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி முதல் 25ந்தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. 23ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்தில், அதிமுகவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி, பாஜக உடனான கூட்டணி, சசிகலா விவகாரம் உள்பட பல நிகழ்வுகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப் பாளர் இ.பி.எஸ். தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என சிலர் கூறி வரும் நிலையில், அதுகுறித்து, இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், பொதுக்குழு உறுப்பினர்கள் எனும் பெயரில் சசிகலா ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர்களிடம் இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு உடனடியாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை தயார் செய்யுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு வந்த அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேன், கைபேசி எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் அதிமுக கூட்டத்தை புறக்கணித்துச் சென்றார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் முன்பு திரண்ட தொண்டர்கள் சிலர், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், கட்சியின் தலைவராக ஓபிஎஸ்தான் வர வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி ஆதரவாளர்களும் கோஷம் எழுப்பினர். இது சலசலப்பை ஏற்படுத்தியது.