காந்திநகர்: குஜராத் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஹர்திக்பட்டேல் ஜூன் 2ந்தேதி பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காந்திநகர் அலுவலகத்தில் ஹர்திக் படேலை பாஜக வரவேற்க தயாராக உள்ளது என அறிவித்து உள்ளது.
குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அன்பயனாக மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவராக இருந்து வந்த ஹர்திக் படேல், கட்சி தலைமைமீது கொண்ட அதிருப்தியால், மே 12ந்தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவதாக அறிவித்தார். இது தொடர்பாக சோனியாகாந்திக்கு கடிதம் அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். அப்போது செய்தியளார்களிடம் பேசியவர், ‘ காங்கிரஸ் கட்சியினர் இந்து மதத்தின் மீது, ராமர் மீதும் இழிவான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை கூறிவருவதால் அந்த கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அயோத்தியா ராமர் கோவிலின் சுவர் மீது நாய்கள் சிறுநீர் கழிப்பதாக கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைமையிடம் இந்து மதத்தின் மீதும், ராமர் மீதும் என்ன பகை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் விலகியது குறித்து காங்கிரஸின் தலைமை இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதனால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார்.
இதையடுத்து, அவர் எந்த கட்சியில் சேருவார் என எதிர்பார்ப்பு எழுந்தது. சமீபத்தில், காங்கிரஸின் மூத்த தலைவர் கபில்சிபல் காங்கிரஸில் இருந்து விலகி அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்த நிலையில், ஹர்திக் பட்டேலும் சமாஜ்வாதியில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின.
இந்த நிலையில், ஹர்திக் பட்டேல் வரும் 2ந்தேதி ஜூன்) பாஜகவில் இணைய உள்ளதாக செய்தி ஊடகமான ஏஎன்ஐ தெரிவித்து உள்ளது. இதை உறுதி செய்யும் வகையில், குஜராத் மாநில பாஜகவும், ஹர்திக் பட்டேலை வரவேற்க தயாராக உள்ளதாக தெரிவித்து உள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பட்டேல், `நான்பாஜகவில் இணையப் போவதில்லை.. அப்படி ஏதேனும் நடந்தால் உங்களிடம் சொல்கிறேன்’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் பட்டேல்! சோனியா காந்திக்கு கடிதம்…