காரண விநாயகர் திருக்கோவில், கோயம்புத்தூர் மாவட்டம், மத்தம்பாளையத்தில் அமைந்துள்ளது.
காரணவிநாயகர் கோவில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. முன்னொரு காலத்தில் இவ்வூரைத் தாண்டியுள்ள மற்றொரு கிராம மக்கள் தங்கள் ஊரில் விநாயகர் கோவில் அமைக்க விரும்பி ஒரு சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வந்தனர். ஓரிடத்தில் வண்டியின் அச்சு முறியவே சிலையை இறக்கிவிட்டு, பழுது பார்த்தனர். மீண்டும் வண்டியில் சிலையைத் தூக்கி வைக்க முயன்ற போது அவர்களால் அசைக்கவே முடியவில்லை. அங்கேயே சிலையை வைத்து சிறு கோவிலும் கட்டினர்.
ஒருமுறை ஆங்கிலேயர்கள் அவ்வழியே ரோடு அமைப்பதற்காக கோவிலை அகற்றும்படி மக்களிடம் கூறினர். மக்கள் மறுக்கவே, தாங்களே கோவிலை அகற்ற ஏற்பாடு செய்தனர். அன்று இரவில் ஒரு ஆங்கில அதிகாரியின் கனவில் ஏராளாமான யானைகள் அவரை விரட்டுவது போல் கனவு வந்தது. இதனால் மனம் மாறிய அந்த அதிகாரி, கோவில் இருந்த இடத்தில் மட்டும் வளைவாக ரோடு அமைக்க ஏற்பாடு செய்தார். இப்போதும் இவ்விடத்தில் ரோடு வளைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள், விவசாயம் செழிக்க நந்தியுடன் இணைந்த விநாயகரைத் தரிசித்து செல்கின்றனர். இது தவிர புது வாகனங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது.