சென்னை:
மேயர் பிரியா தலைமையில் இன்று சென்னை மாநகராட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் முதல் சொத்துவரியை உயர்த்தி தமிழகஅரசு அறிவித்து உள்ளது. குறைந்த பட்சம் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதை திரும்ப பெற வலியுறுத்தி அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேயர் பிரியா தலைமையில் இன்று சென்னை மாநகராட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் சொத்துவரி உயர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.