சென்னை:
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்கிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தேர்தல், காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர், இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழகத்தில் காலியாகும் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கு, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், நான்கு இடங்கள் தி.மு.க.,வுக்கும், இரண்டு இடங்கள் அ.தி.மு.க.,வுக்கும் கிடைக்க உள்ளன.
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவிக்கையில், இன்று பகல் 12 மணியளவில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மாநிலங்களவைத் தேர்தலில் என் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel