தாம்பரம்: மனைவி, குழந்தையை மின்சார ரம்பத்தால் அறுத்துக் கொலை செய்த ஐடி ஊழியரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.  அவரது வீட்டில் ஒட்டப்பட்டிருந்த கடிதம் மூலம் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படு கிறது.  இந்த சோகமான சம்பவம் அவர்களது திருமண நாளில் நடைபெறுள்ளது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள பொழிச்சலூர். இந்த பகுதியில் பிரகாஷ் (வயது 41) மனைவி காயத்திரி தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். பிரகாஷ் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். நேற்று அவர்களது திருமண நாள் என்று கூறப்படுகிறது. இந்த நாளில், அவர் தனது  இதற்கிடையில்,  மனைவி காயத்திரி (வயது 39), மகள் நித்யஸ்ரீ(வயது 13) , மகன் ஹரி கிருஷ்ணன் (வயது 8) ஆகியோரை மின்சார ரம்பத்தால் அறுத்து கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

பிரகாஷின் வீட்டு கதவு இன்று காலை திறக்கப்படவில்லை என்பதால், அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், கதவை தட்டியும் திறக்கப்பட வில்லை.  இந்தச் சமயத்தில் பிரகாஷின் உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றார். அவரும் கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. அதனால் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது குழந்தைகள், காயத்திரி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனே அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்ததுடன், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்ததார்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி தலைமையிலான போலீஸார், கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு பிரகாஷ், காயத்திரி, குழந்தைகள் ஆகியோர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தனர். பின்னர் நான்கு பேரின் சடலங்களையும் மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், வீடு முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் சுவரில் ஒட்டப்பட்டிருந்த கடிதம் ஒன்றை கண்டுபிடித்தனர். அதில்,`இந்த முடிவு குடும்பத்தினரோடு சேர்ந்து எடுக்கப்பட்டது’ என்று எழுதப்பட்டிருந்தது. அடுத்து வீட்டில் மரம் அறுக்கும் ரம்பம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு அந்த ரம்பம் எங்கு வாங்கப்பட்டது என்று போலீஸார் விசாரணை நடத்தியதில், அது  கடந்த 19-ம் தேதி ஆன்லைன் மூலம் வாங்கியிருந்ததற்கான பில் கிடைத்தது. அதனால் பிரகாஷ் குடும்பத்தினர் திட்டமிட்டே இந்த முடிவை எடுத்திருப்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாம்பரம் கமிஷனர் ரவி, உயிரிழந்த பிரகாஷ், மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி காயத்திரி, குழந்தை களை முதலில் கொலை செய்திருக்க வேண்டும் என சந்தேகிக்கிறோம். அதன்பிறகு அவரும் மரம் அறுக்கும் ரம்பத்தால் தன்னுடைய கழுத்தை அறுத்து பிரகாஷ் தற்கொலை செய்திருக்கலாம் என கருதுகிறோம்.

பிரகாஷின் வீட்டில் சில லட்சம் ரூபாய்க்கான கடன் பத்திரங்களை கைப்பற்றியுள்ளோம். மேலும் பிரகாஷின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது காயத்திரிக்கும் பிரகாஷிக்கும் நேற்று திருமண நாள். அதனால் காயத்திரியின் தந்தை திருப்பதிக்குச் சென்றுவிட்டு இன்று பிரகாஷின் வீட்டுக்கு வந்தார். அதற்கு முன் அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்துவிட்டனர்.

ரம்பம் ஓடிய சத்தம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கேட்டுள்ளது. ஆனால் வீட்டை சுத்தம் செய்யும் கருவி ஓடுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கருதியுள்ளனர்.  குழந்தைகளும் மனைவியும் சத்தம் போடாமலிருக்க மயக்க மருந்து அல்லது தூக்க மாத்திரைகளை அவர்கள் சாப்பிட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கிறோம். பிரேத பரிசோதனையில்தான் நான்கு பேரின் மரணத்துக்கான காரணம் தெரியவரும். வீட்டில் கைப்பற்ற கடிதத்தின் உண்மை தன்மையையும் ஆராய முடிவு செய்துள்ளோம். பிரகாஷ், காயத்திரியின் போன்களுக்கு வந்த அழைப்புகளையும் ஆய்வு செய்துவருகிறோம். கடன் கொடுத்தவர்கள் யாராவது பிரகாஷ், அவரின் குடும்பத்தினரை மிரட்டினார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

 கொலை நடந்த வீட்டின் அருகில் வசிப்பவர்களிடம்  நடத்திய விசாரணையின்போது,  பிரகாஷுக்கும் அவரின் மனைவி காயத்திரிக்கும் இடையே கடன் பிரச்னை காரணமாக அடிக்கடி சண்டை நடக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சோக சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு பிரகாஷ், காயத்திரியின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.