செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ்-ன்  இறுதிப்போட்டியில் சீன வீரரிடம்  தமிழக வீரர் பிரக்ஞஞானந்தா தோல்வியடைந்தார்.

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் நசெஸ் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 9 தொடர்கள் நடைபெறும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த தொடர்  நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.  செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 16 வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இத்தொடரின் 2ஆம் நாள் முடிவில், பிரக்ஞானந்தா 5ஆவது இடத்திலும், கார்ல்சன் 3ஆவது இடத்திலும் உள்ளனர். மேலும், இந்திய வீரர்கள் பி. ஹரிகிருஷ்ணா 7ஆவது இடத்திலும், விடித் குஜராத்தி 13ஆவது இடத்திலும் உள்ளனர். சீன வீரர் வேய் யி முதல் இடத்தில் உள்ளார்.

தற்போது 4வது தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா உலக சாம்பியன் கார்ல்சன் உள்பட பலரை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தார். ஐந்து முறை உலக சாம்பியனும், தற்போதைய நம்பர்1 வீரருமான கார்சலனை வீழ்த்தியதுடன்,   அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் அனிஷ் கிரியை  டை – பிரேக்கர் சுற்றில் 1.5 – 0.5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இதையடுத்து,   இறுதிப்போட்டியில், சீன வீரரும், உலகின் 2ஆம் நிலை வீரருமான டிங் லிரன் உடன் மோதினார்.

ஆனால், இதில் பிரக்ஞானந்தா எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. டிங் டிரன் கடுமையாசக மோதினார். இதனால்,   இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா டிங் லிரனிடம் தோற்றார்.

இன்று (வெள்ளிக்கிழமை)  அதிகாலை நடந்த மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் செசபிள் மாஸ்டர்ஸ் 2022 ஆன்லைன் போட்டியின் டை பிரேக்கில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞஞானந்தா, உலகின் நம்பர்.2 டிங் லிரனுடன் போராடி தோல்வியடைந்தார். சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவன், தொடக்க ஆட்டக்காரரை இழந்த பிறகு இரண்டாவது செட்டைப் போராடி வென்றார்.