ஸ்ரீரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மலைக்கோவிலான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மே 27 முதல் 31-ம் தேதி வரை அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில். இந்த கோவிலில் சுந்தர மகாலிங்கப் பெருமானார் மூலவராக அமர்ந்து பக்தர்களுக்க ஆசி வழங்கி வருகிறார். இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த மாதம், அதாவது மே 27 முதல் 31-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல 5 நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.