சேலம்
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக நாளை மறுநாள் மே மாதம் மேட்டூர் அணை திறந்து விடப்படுகிறது.
கடந்த 1925 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1925 ஆம் ஆண்டு மேட்டூர் அணை கட்டுமானப் பணி தொடங்கி 1934 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆண்டு தோறும் ஜூன் 12 ஆம் தேதி தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்கான தண்ணீர், மேட்டூர் அணையிலிருந்து திறப்பது வழக்கம் ஆகு,.
அணையில் நீர் இருப்பை பொருத்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு தேதியில் மாறுபாடு இருக்கும். அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால் குறிப்பிட்ட ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 88 ஆண்டுகளில் இது வரை 18 முறை மட்டுமே, குறிப்பிட்ட நாளில் நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால் வழக்கமாக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டியது, முன் கூட்டியே அதாவது மே 24ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நீர் திறந்துவிட உள்ளார்.
இந்த மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 88 ஆண்டுகளில் 1936, 1937, 1938,1940, 19411942. 1943, 1944, 1945, 1946, 1947 ஆகிய ஆண்டுகளில் ஜூன் 12ம் தேதிக்கு முன்பாக அணை திறக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட 2011ம் ஆண்டில் ஜூன் 12ம் தேதிக்கு முன்பாகவே அணை திறக்கப்பட்டுள்ளது.
அதைப் போல் மே மாதத்தைப் பொறுத்த வரை கடந்த 1947ம் ஆண்டில் மட்டுமே அணை திறக்கப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்து முதல் முறையாக மேட்டூர் அணையிலிருந்து நடப்பாண்டு தான், டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.