சேலம்; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியிலிருந்து 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக மேட்டூன் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகனேக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்துவருகின்றனர். நீர்வரத்து அதிகமாக உள்ளதால், சுற்றுலாப்பயணிகளின் படகு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 109.46 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் ஒன்றரை அடி உயர்ந்து 112.5 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து 15.11 டி. எம். சி. ஆக உள்ளது. அதாவது, நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியிலிருந்து 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்த நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியில் இருந்து 8,000 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது.
ஒரே நாளில் அணை நீர்மட்டம் 1.67 அடி உயர்ந்துள்ளது.அணையின் நீர் இருப்பு 82.40 டி.எம்.சியாக உள்ளது. பருவ மலைக்கு முன்பாகவே அணை யின் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கியது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூன் அணையில் 93.4 டி.எம்.சி நீரை சேமிக்க முடியும். மேட்டூர் அணையின் மொத்த உயரம் 124 அடியாகும். இந்த அணை 1700 மீட்டர் நீளம் கொண்டது. ஆனால் 120 உயரம் வரை மட்டுமே அணையில் தண்ணீரை சேமிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.