பிரான்ஸ்:
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பிரான்ஸில் நேற்று முதல் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியுள்ளது. இதில், ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் அக்சய் குமார், சேகர் கபூர் உள்ளிட்டோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த திரைப்பட விழாவில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் மற்றும் அவர்கள் அணியும் பிரத்தியேக ஆடைகள் இணையத்தில் பகிரப்படுகின்றன.