சென்னை: கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ந்தேதி சென்னையில் மலர் கண்காட்சியை தமிழக மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதியின் பிறந்தநான் ஜூன் 3ந்தேதி வருகிறது. அன்றைய நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழகஅரசு அறிவித்த உள்ளது. இதையொட்டி, சென்னையில் பிரமாண்டமான மலர் கண்காட்சி நடத்த தமிழ் நாடு அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி முதல் ஜூன் 5-ந்தேதி வரையிலான 3 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது. இந்த மலர் கண்காட்சியில் புனே, பெங்களூரு, ஊட்டி, ஓசூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வகைகளில் கண்ணை கவரும் மலர்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற இருக்கிறது. மேலும் கருணாநிதியின் உருவத்தில் மலர் அலங்காரம் இடம்பெறுகிறது. தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலும் மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்க ஏதுவான தேவையான ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ந்தேதி மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார்.
தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.