வாரணாசி:
ஞானவாபி மசூதி விவகாரத்தில் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

உத்தர பிரதேசத்தில் வாரணாசியில் இருந்த ஹிந்து கோவிலை இடித்து, முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சியின்போது, ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக நீண்டகாலமாக சர்ச்சை உள்ளது. ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்துஉள்ளது. இந்த அம்மனுக்கு தினமும் பூஜை நடத்த அனுமதிக்க கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிக்குமார் திவாகர், ஞானவாபி மசூதி வளாகம் முழுதும், வரும் 17 ம் தேதிக்குள் வீடியோ பதிவுடன் ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆய்வுக் குழு தலைவர் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்று கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஞானவாபி மசூதி விவகாரத்தில் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.