சென்னை: அரியலூர் மாவட்டத்தில் ஆதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தனி நபர்களாலும், அரசியல் கட்சியினராலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க உத்தரவிட வலியுறுத்தி, அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள அய்யன் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் காந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், அய்யன் சுத்தமல்லியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஆதி திராவிடர்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்திற்காக 24 மனைகள் பிரிக்கப்பட்து. இதைல் 4 மனைகளை ஆதிதிராவிடர்கள் அல்லாத பன்னீர்செல்வம் மற்றும் லோகநாதன் ஆகியோர் 4 மனைகளை ஆக்கிரமித்துள்ளனர். ஏற்கனவே  ஏற்கனவே வீடுகளும், விவசாய நிலங்களும் வைத்திருக்கக்கூடிய இவர்கள் இருவரும்  ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கிய இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதை அகற்றக்கோரி,  கடந்த ஆண்டு (2021)  ஜூலை மாதம் மாவட்ட நிர்வாகத்திடமும், ஆதி திராவிடர் நலத்துறையிடமும் மனு கொடுத்தோம். ஆனால், இதுவரை  நடவடிக்கை எடுக்கவில்லை, ஆகையால் ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த நான்கு மனைகளையும் மீட்க உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், சுவாமிநாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி  அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.