சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார் வெளியாகி உள்ளது. சிவகங்கையை சேர்ந்தவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வந்து புகார் அளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக பலர் புகார் கொடுத்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பலர் அவர்மீது புகார் கூறினார். இதையடுத்து, கைது செய்யப்படலாம் என நினைத்து, முன்ஜாமின் கோரியிருந்தார்.
ஆனால், அவருக்கு முன்ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டதால், அவர் தலைமறைவானார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார். தலைமறைவான ராஜேந்திரபாலாஜியை 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். பின்னர் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் மறைந்திருந்த ராஜேந்திர பாலாஜி போலீசாரிடம் சிக்கினார். அவரை ஜாமின் விடுவிக்க தமிழகஅரசு மறுத்து தெரிவித்து வந்த நிலையில், உச்சநீதிமன்றம் அவரை ஜாமனில் விடுத்தது.
இந்த நிலையில், அவர்மீது தற்போது மேலும் ஒருவர் புகார் அளித்துள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் ரூ.2 கோடி வரை பெற்று மோசடி செய்துவிட்டதாக ராஜேந்திரபாலாஜி மீது சிவகங்கையை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் புகார் அளித்தார். இவர் தனது புகார் மனுவை சிவகங்கை காவல்துறையில் கொடுக்காமல், சென்னை வந்து சென்னை மாநக காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரபாலாஜியை கைது தமிழகஅரசு மீண்டும் கைது செய்யுமா என்பது விரைவில் தெரிய வரும்.