புதுடெல்லி:
ந்தியாவில் கல்வி, பாடப்புத்தகங்கள் அனைத்தும் காவி மயமாகி வருவதாக திமுக மாணவரணி மாநாட்டில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில், திமுக மாணவரணி சார்பில் கல்வி – சமூக நீதி குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி, மஹுவா மொய்த்ரா, இந்தியா மட்டுமே இந்தியா கிடையாது எனவும் இந்துத்துவா மட்டுமே இந்தியா அல்ல எனவும் கூறினார். பல்வேறு கலாச்சாரங்களை கொண்டதே இந்தியா எனக் கூறிய அவர், இந்தியாவில் கல்வி, பாடப்புத்தகங்கள் அனைத்தும் காவி மயமாகி வருவதாகக் கூறினார்.