சென்னை:
சென்னையில் உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலைக்கு, மறைந்த நடிகர் விவேக்கின் பெயரை தமிழக அரசு சூட்டி அரசாணை வெளியிட்டுள்ளது.
விவேக் இல்லம் அமைந்திருக்கும் பத்மாவதி நகர் பிரதான சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று, சில நாட்களுக்கு முன்பாக அவரது மனைவி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்டு அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
விவேக்கின் வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதை திரைத் துறையினரும் சமூக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.