மயிலாடுதுறை: சீர்காழி அருகே புதுச்சேரி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நள்ளிரவில் வயலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 18 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கரைமேடு பகுதியில் காரைக்காலில் இருந்து 50ககும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து புதுச்சேரி சென்றுகண்டிருந்தபோது. அப்போது சாலையில் பேருந்துக்கு எதிரே கான்கிரீட் கலவை ஏற்றிச்சென்ற லாரி வந்துள்ளது. இதனால், லாரிக்கு வழி விடுவதற்காக பேருந்தை டிரைவர் சாலையோரம் ஒதுக்கியபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகே இருந்த வயலில் ஒரு புறமாக சாய்ந்து விபத்துக்குள்ளானது.
பேருந்து கவிழ்ந்ததும் அதனுள் இருந்த பயணிகளின் சத்தம் எழுப்பினர். பலரின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்ததுடன், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பொதுமக்கள், காவல்துறையினர் பேருந்தினுள் சிக்கியவர்களை மீட்டு, 108 வாகனத்தின் மூலம் அனைவரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்த விபத்தில்காரைக்கால் அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் 7பேர் மற்றும் காட்டுமன்னார்கோயில் வடிவழகன், அண்ணன் பெருமாள் கோயில் கலியபெருமாள், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், வெங்கட்ராமன், சீர்காழி விஜயலட்சுமி, உட்பட 18 பேர் காயமடைந்துதனர்.
விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலிசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.