ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுதும் வெளியாகிறது.
இது தொடர்பாக கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கங்களில், “நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த “விக்ரம்” திரைப்படம் உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் படத்தின் அறிமுக டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
காரைக்குடி, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதன் பிறகு ‘பிக் பாஸ் சீசன் 5’, கமலுக்கு கரோனா பாசிட்டிவ் ஆகிய காரணங்களால் தாமதமான இறுதிகட்ட படப்பிடிப்பு, சில வாரங்களுக்கு முன்னர் முடிந்தது.
படப்பிடிப்பு முடிந்ததை வீடியோ வெளியிட்டு அறிவித்தது படக்குழு. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்த நிலையில், ‘விக்ரம்’ படத்தை தயாரித்து வரும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் தேதியை, வரும் மார்ச் மாதம் 14-ம் தேதி, காலை 7 மணிக்கு அறிவிக்க இருப்பதாக அறிவித்தது.
மேலும், நடிப்பின் சிகரங்களான கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில் என மூன்று நட்சத்திரங்களுடன், நட்சத்திர பட்டாளமே இணைந்து கடந்த 9 மாதங்களாக கடுமையாக பணியாற்றியுள்ளதால் பல சாதனைகளை படைக்கும் அனைத்து அம்சங்களும் விக்ரம் படத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருதது.
ரயில்பயணம் எனக்குப் பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும்.என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. மூன்றாம்பிறை,மகாநதி,தேவர்மகன் என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம்.இப்போது என் படத்தைத் தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. pic.twitter.com/S07AzG9TCr
— Kamal Haasan (@ikamalhaasan) April 28, 2022
இந்நிலையில், கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, படத்தின் விளம்பர போஸ்டர்கள் ரயிலில் ஒட்டப்பட்டது கவனத்தை ஈர்த்து வருகிறது.