மும்பை:
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா – குஜராத் அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.
157 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் குஜராத் அணி பெரும் 6வது வெற்றி இதுவாகும்.
பெங்களுரூ -ஹைதராபாத் அணிகள் இடையே நடந்த மற்றொரு போட்டியில் ஸ் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூரூ அணி, 16.1 ஓவரிலேயே 68 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
69 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணி 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்த சன்ரைசர்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணி நடக்க உள்ள போட்டியில் லக்னோ – மும்பை அணிகள் மோத உள்ளன.