டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,527- பேருக்கு கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பதுடன் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.குறிப்பாக டெல்லி, உ.பி. உள்பட 6 மாநிலங்களில் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தொற்றின் 4-வது அலை பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,527- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.56 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்புக்கு நேற்று ஒரே நாளில் 33- பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15079- ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 1,656- பேர் குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 16 ஆயிரத்து 068-ல் இருந்து 4 கோடியே 25 லட்சத்து 17 ஆயிரத்து 724- ஆக உயர்ந்துள்ளது.
தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15079- ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 187.46 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.