சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட வடசென்னை பகுதிகளில்  நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை  முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.  அவருடன் அமைச்சர் நேரு, மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்பட பலர் இருந்தனர்.

கடந்த ஆண்டு பெய்த பெருமழையால் சென்னை வெள்ளத்தில் மிதந்த நிலையில், மீண்டுமொரு முறை இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு, மழைநீர் வடிகால் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  இந்த பணிகளை அவ்வப்போது முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்ற ஆய்வுகள் நடத்தி, பணிகளை விரைந்து முடிக்க ஆவன செய்து வருகிறார்.

அதன்படி, இன்று ரூ.15 கோடியில் கொசஸ்தலை ஆற்றின்கரைகளை பலப்படுத்தும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடசென்னை பகுதிகளான  மணலி புதுநகர், திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை உள்பட கொசஸ்தலை ஆற்று பகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.  முதலில்  மணலி புதுநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.  தொடர்ந்து, மணலி வடிவுடையம்மன் கோவிலிலும் அதன் சுற்றியுள்ள தெருக்களிலும் மற்றும் புதுநகர் அருகேவுள்ள கொசஸ்தலை ஆற்றில் இணையும் மழைநீர் வடிகாலையும் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார. ரூ.15 கோடியில் கொசஸ்தலை ஆற்றின்கரைகளை பலப்படுத்தும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர், கொருக்குப்பேட்டை பகுதிக்கு சென்று அங்கு மழைநீர் வடிகால் ஆய்வு பணிகளை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.