மும்பை:
பிஎல் தொடரில்  கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் அதிரடியாக 59 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்சர்களுடன் சதம் விளாசினார்.

தொடர்ந்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் த அணி சார்பில் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட்களை கைப்பற்றினார். ஓபேட் மெக்காய் 2 விக்கெட்களும், அஸ்வின், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க போட்டியில் லக்னோ – பெங்களுரூ அணிகள் மோத உள்ளன.