சென்னை:
விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே கருப்பனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கணேசன். இவர் தன்னுடைய விளைநிலத்தில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டப் பணிகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தற்கொலை செய்து கொண்டாா். உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயி சடலத்துடன், தருமபுரி – பென்னாகரம் சாலையில், ஏ.செக்காரப்பட்டியில் அப்பகுதியைச் சோ்ந்த அதிமுக, பாமக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். இந்த நிலையில், அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக அதகப்பாடி கிராம நிா்வாக அலுலா் வி.குமாா் அளித்த புகாரின் பேரில், இண்டூா் போலீஸாா் 100 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இந்நிலையில், தர்மபுரியில் உயிரிழந்த விவசாயி கணேசனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க்ப்படும் என்றும் அறிவித்துள்ளார்.