சென்னை: பேருந்து பயணத்தின்போது, பயணிகள் பேருந்து நிறுத்தங்களை அறிந்துகொள்ளும் வகையில் பேருந்துகளில் ஒலிப்பெருக்கி அமைக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

தமிழகத்தில் பேருந்துகளில் பெண்கள் மீதான வன்முறையை தடுக்கும் வகையில் காமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தற்போத ஒலிப்பெருக்கி அமைக்கப்படும் என தெரிவித்து உள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக அடுத்து வரும் நிறுத்தம் குறித்த அறிவிப்பை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த ஒலிப்பெருக்கி அமைக்கும் பணி முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில்  அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு மின்சார ரயில்களில் நிறுத்தங்களை அறிவிக்கும் தானியங்கி ஒலிபெருக்கி போல, சென்னை மாநகராட்சிப் பேருந்துகளில் விரைவில் ஒலிபெருக்கி பொருத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.  ண்டக்டர்களை மட்டுமே நம்பிப் பயணம் செய்யும் வெளியூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக, சென்னை மாநகரப் பேருந்துகளில் பஸ் நிறுத்தத்தை அறிவிக்க தானியங்கி ஒலி பெருக்கி வசதி, மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. பின்னர் அது என்னவானது என்றே தெரியாமல் போனது. இந்த நிலையில், தற்போது திமுக அந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.