ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில், தரைக்கு கீழே உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருமுல்லைவாயல் சிவசக்திநகரில், குடியிருப்பாளர் ஒருவர் வீட்டின் தரைத்தளத்தில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முன்வந்துள்ளர். அதற்காக சம்பின் மூடியை திறந்து உள்ளே சென்று சுத்தம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சம்பில் இருந்து வெளியேறிய விஷயவாயு தாக்கி அவர் மயங்கி விழுந்த நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற அவரது மகன், மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த அவரது உறவினர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மற்றொருவர் உயிருக்கு போராடிய நிலைல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் அவர்களை மீட்டனர். விஷ வாயு தாக்கியதில் வீட்டின் உரிமையாளர் பிரமோத், பிரேம்குமார், தந்தை பிரதீப் குமார் ஆகியோர் உயிரிழந்ததாகவும், உயிருக்கு போராடிய சாருநாதன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.