தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய ‘லோகோ’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த லோகேவில்,  திருநீர்மலை பெருமாள்கோவில், விமானப்படைதளம், ரெயில் நிலையம், எம்.ஐ.டி. கல்லூரி இடம் பெற்றுள்ளது.

 சென்னை மாநகராட்சி ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிலையில், நிர்வாக வசதிகளுக்காக, புறநகர் பகுதியை ஒட்டிய 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளை இணைத்து புதிதாக தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.  தாம்பரம் மாநகராட்சிக்கு 70 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்கு தேர்தல் நடைபெற்று முதல் மாநகராட்சி மேயராக  வசந்தகுமாரி, துணை மேயராக காமராஜர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து  தாம்பரம் மாநகராட்சிக்கு எனத் தனி லோகோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அந்த லோகோவில், தாம்பரத்தில் செயல்பட்டு வரும் இந்திய விமானப்படை பயிற்சி மையம்,  திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில்,  தாம்பரம் ரெயில் நிலையம், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் படித்த எம்.ஐ.டி. கல்லூரி ஆகியவற்றின் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆன்மிகம், படிப்பு, போக்குவரத்து, வீரம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் இந்த லோகோ வடிவமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.