புதுடெல்லி:
டகிழக்கு பிராந்தியத்தில் ஒன்றிய அரசு இந்தியை திணிப்பதாக அப்பிராந்தியத்தின் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்தி அல்லாத பிற மொழிகளைப் பேசும் இந்திய மாநிலங்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

அமித் ஷாவின் பேச்சிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

“இந்த நடவடிக்கை ஒரு வகையான திணிப்பு என்பதால் நாங்கள் எதிர்க்கிறோம். இந்தி ஒரு விருப்பப் பாடமாக வேண்டுமானால் இருக்கலாம். இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது என அனைத்து மாநில அரசுகளிடமும் நாங்கள் கோருகிறோம்” என்று வடகிழக்கு மாணவர் அமைப்பின் தலைவர் சாமுவேல் பி ஜிர்வாதெரிவித்துள்ளார்.