சென்னை:
2022-23ம் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
2022-23ம் நிதி நிலை அறிக்கை இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர் தலைமையிலும், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையிலும் 2022-23-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரிவிதிப்பு நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் தாக்கல் செய்கிறார்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில் சென்னை மாநகரை அழகுப்படுத்துதல், தரமான சாலைகள் போன்ற முக்கிய அம்சங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.