சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில், சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யகோரிய ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், தீர்ப்பை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்து உள்ளார்.

ஜெ.மறைவைத் தொடர்ந்து, சசிகலா, அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். பின்னர் அதிமுக உடைந்து, மீண்டும் ஒட்டிய நிலையில், சசிகலாவும் சிறைக்கு சென்றுவிட்டதால், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவரை தூக்கியதுடன், அந்த பதவியே இனிமேல் கிடையாது என இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தீர்மானம் நிறவேற்றியது.
இதை எதிர்த்து சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நீதிபதி திடீரென விடுமுறையில் சென்று விட்டதால், வேறு ஒருநாளில் தீர்ப்பு வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.