சென்னை: மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கல்லூரி இல்லாத பகுதியில் முதலில் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மானிய கோரிக்கை விவாதத்துக்காக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
முன்னதாக இன்று காலை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைசசர்கள் பதில் கூறினர்.
4வழிச்சாலைகள் குறித்த கேள்விக்கு, மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
அதுபோல மற்றொரு உறுப்பினர் தங்களது பகுதியில் புதிய கல்லூரி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கல்லூரி இல்லாத பகுதியில் முதலில் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழகத்தில் உயர்க்கல்வியை வளர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் கூறினார்.