சென்னை: பொதுத் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான 115 பக்க வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. அதில், வினாத்தாள் வைக்கப்படும் கட்டுக்காப்பு மையங்களில் கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற திரும்புதல் தேர்வுகளின்போது, வினாத்தாள் வெளியான சம்பவம் அதிர்ச்சியை அளித்தது. அதைத் தொடர்ந்து, இனிமேல் வினாத்தாள் வெளியாவதை தடுக்கும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழகஅரசு அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ள நிலையில், தேர்வு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுத்தறை வெளியிட்டு உள்ளத.
இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனுப்பி இருக்க கூடிய சுற்றறிக்கையில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டிருக்க வேண்டும், காவலர் பணியில் இருக்க வேண்டும், இரட்டை பூட்டு கொண்டு வினாத்தாள் கட்டுகள் இருக்கும் அறை பூட்டப்பட்டிருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு புறம்பாக தேர்வுத்துறை அதிகாரிகளை நியமிக்க கூடாது. பொது தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை முதன்மை கண்காணிப்பாளராக நியமனம் செய்ய கூடாது.
தேர்வு அறை கண்காணிப்பாளராக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் அன்றைய தேர்வு படத்திற்கான ஆசிரியராக இருக்க கூடாது, அரசு பள்ளி ஆசிரியர்களையே தேர்வு பணியில் ஈடுபடுத்த வேண்டும், தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களை நியமிக்கலாம் என்பட உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அடங்கிய 155 பங்கங்களைக் கொண்ட கையேடு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.