டெல்லி: பாராளுமன்ற  மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூன் மாதம் முடிகிறது. திமுக சார்பில் 3 எம்.பி.க்களும், அதிமுகவில் 3 எம்.பி.க்களின் பதவிக்காலங்கள் முடிவுக்கு வருகின்றன. மேலும், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட நாடு முழுவதும் 72 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் 12 பேரை சேர்த்து 245 உறுப்பினர் இடங்கள் உள்ளன. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். இங்கு உறுப்பினர்களாக உள்ளவர்களில் 3-ல் 2 பங்கு பேரின் 6 ஆண்டு பதவிக்காலம் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். இதன்படி வருகிற ஜூன் மாதம் 20 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்த நிலையில், ராஜ்யசபாவில் தற்போது எம்.பி.க்களாக பதவி வகித்து வரும் 72 எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல், ,ஜூன் மற்றும் ஜூலை, ஆகஸ்டு  மாதங்களில் முடியவடைய உள்ளது.  ஏழு நியமன எம்.பி.,க்கள் மற்றும் பா.ஜ., காங்கிரஸ், அதிமுக,. திமுக உள்பட பல கட்சிகளைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர்கள்  72 பேரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இவர்களில் 6 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களின் பதவிக்காலம் ஜூன் 29ந்தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி, தி.மு.க. எம்.பி.க்கள்  ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், வக்கீல் நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேருக்கும்  பதவிக்காலம் முடிகிறது.

இவர்களுடன் கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுமத்திய நிதி மந்திரியாக உள்ள  நிர்மலா சீதாராமன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.

பதவிக்காலம் முடிவடையும் 72 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு இன்று வழியனுப்பு விழா!