சென்னை:
வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக நீர்வளத் துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தாலும், வன்னியர் ஒதுக்கீட்டை நிலைநிறுத்த தமிழ்நாடு அரசு அனைத்து வாதங்களையும் முன்வைத்தது என்றும், உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது திமுக அரசு தான் எந்த எந்த மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினர்கள் என்பது தீர்ப்பிலேயே இடம்பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel