டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 1335 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துணை இன்று இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அன்படி கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1335 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,25,775 -ஆக உயர்ந்தது. தொற்று பரவல் விகிதம் 0.22 சதவிகிதமாக உள்ளது.
நேற்று சிகிச்சை பலனின்றி மேலும் 52 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,181-ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 1,918-பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,90,922 -ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.76% ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 13.672 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் 1,84,31,89,377 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 23,57,9177 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.