இந்து மத வழிபாட்டு தலங்களில் மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடுப்பி, ஷிவமொக்கா ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களின் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக 2002 ம் ஆண்டு விதிக்கப்பட்ட நடைமுறையை காரணம் காட்டி வருகிறது.

ஏ.எச். விஸ்வநாத் – அனில் பெனக்கே

இதற்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் ஏ.எச். விஸ்வநாத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அனில் பெனக்கே ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அரபு நாடுகளில் சென்று வேலை பார்த்து வரும் நிலையில் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினால் இந்தியாவில் அவர்களுக்கான வேலைவாய்ப்பு இருக்கிறதா என்று விஸ்வநாத் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், இங்குள்ள இஸ்லாமிய வியாபரிகளின் வியாபாரத்தை தடை செய்வதன் மூலம் அவர்களின் வயிற்றில் அடிப்பது சிறிதும் மதிதாபிமானமற்ற செயல்.

அரசு இதனை கண்டும் காணாமல் இருப்பது நல்லதல்ல” என்று பப்ளிக் டிவி-க்கு அளித்த பேட்டியில் எம்.எல்.சி. விஸ்வநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேபோல், “கோயில் திருவிழாக்களின் போது இந்து மதத்தை சேராதவர்கள் கடை வைக்க கூடாது என்பதும், இந்து மதத்தை சேராதவர்கள் கடைகளில் பொருட்களை வாங்கக் கூடாது என்று கூறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி அனைவரும் இங்கு சமம்” என்று எம்.எல்.ஏ. அனில் பெனக்கே தெரிவித்துள்ளார்.

இதனால், கர்நாடக பா.ஜ.க. கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது.