டேராடூன்
உத்தரகண்ட் மாநிலத்தின் முதல் பெண் சபாநாயகராக ரிது கந்தூரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில்ல் கோத்வார் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ரிது கந்தூரி முன்னாள் முதல்வர் பி சி கந்தூரியின் மகள் ஆவார். உத்தரகாண்ட் சட்டசபையில் சபாநாயகர் தேர்தல் நடந்தது. இதில் பாஜக சார்பில் ரிது கந்தூரி போட்டியிட்டார்.
இம்மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது கட்சி சார்ப்9இல் யாரையும் வேட்பாளரகா நிறுத்தாமல் போட்டியில் இருந்து விலகியது. இதையொட்டி ரிது கந்தூரி உத்தரகாண்ட் சட்டசபை சபாநாயகராகப் போட்டியின்றி தேர்வு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ரிது கந்தூரி உத்தரகாண்ட் மாநிலச் சட்டசபையின் முதல் பெண் சபாநாயகர் ஆவார். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ரிது கந்தூரிக்கு பாரட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.