வாஷிங்டன்

முதல் அமெரிக்கப் பெண் வெளியுறவுச் செயலரான மேடலின் ஆல்பிரைட் புற்றுநோயால் உயிர் இழந்துள்ளார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனால் வெளியுறவுச் செயலராக மேடலின் ஆல்பிரைட் நியமனம் செய்யப்பட்டார்.   இவர் இந்த பதவிக்கு வந்த முதல் பெண் என்னும்  பெருமையைப் பெற்றார்.  மேடலின் ஆல்பிரைட்  இந்த பதவியில் 2001 ஆம் ஆண்டு வரை இருந்து ஓய்வு பெற்றார்.

தனது பதவி ஓய்வுக்குப் பிறகு இவர் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து வந்தார்.   இது உலக அளவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.    இவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முயன்றார்.  ஆனால் செக்கோஸ்லோவேகியாவை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடந்த 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உயரிய விருதான சுதந்திர பதக்கத்தை மேடலின் ஆல்பிரைட்டுக்கு அப்போதைய அதிபர் பாரக் ஒபாமா வழங்கி கவுரவித்தார்.    தற்போது 84 வயதாகும் இவர் புற்று நோயால் காலமாகி உள்ளார்.  இந்த தகவலை அவரது குடும்பத்தினர் டிவிட்டர் பதிவில் உறுதி செய்துள்ளனர்.