பெங்களூரு

ர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்ததால் இஸ்லாமிய அமைப்புக்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகக் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர்.   இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு அரசு உத்தரவு செல்லும் எனக் கூறி மாணவிகள் ஹிஜாப அணிந்து வரத் தடை விதித்தது.  இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் கர்நாடக மாநில இஸ்லாமிய மதகுரு மவுலானா சகீர் அகமது,, “கர்நாடக அரசு ஹிஜாப் அணிய விதித்த தடை சரியே எனக் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  எனவே இந்த தீர்ப்புக்கு எதிராக இன்று மாநிலம் தழுவிய பந்த் நடத்த இஸ்லாமிய அமைப்புகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இந்த ஹிஜாப் விவகாரத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கு ஆதரவு அளிக்கும் அனைவரும் தங்களது வணிக வளாகங்களை  ஒரு நாள் அடைத்து இந்த முழு அடைப்பு வெற்றி பெற ஆதரவு அளிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.