புதுடெல்லி:
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியாகாந்தி இல்லத்தில் தொடங்கியது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்குகிறது. இந்நிலையில், கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து சோனியாகாந்தி இல்லத்தில் நடந்து வரும் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.