ஜனவரி 1 ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததன் மூலம் தமிழகம் முழுவதும் வைப்ரேஷனை ஏற்படுத்தியவர் அன்னபூரணி எனும் அன்னபூரணி அரசு அம்மா.
கணவரை பிரிந்து இன்னொரு பெண்ணின் கணவர் உடன் திருமணம் செய்ய முயன்ற அன்னபூரணி, ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற தொலைகாட்சி நிகழ்ச்சியில் இது தொடர்பான பஞ்சாயத்துக்கு வந்து பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபலமானார்.
இதனால் செங்கல்பட்டில் நடக்க இருந்த அன்னபூரணி அரசு அம்மாவின் அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதோடு, காவல்துறை, வழக்கு, விசாரணை என்று பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், அம்மா எனர்ஜி தர்ஷன் என்ற பெயரில் தனது குழந்தைகளை காண ஏப்ரல் 3 ம் தேதி வரப்போவதாக மீண்டும் அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள சுதானந்த ஆசிரமத்தில் வரும் ஏப்ரல் 3ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கும் இந்த எனர்ஜி தர்ஷன் அருள்பாலிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் தலா 700 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஏப்ரல் 1 ம் தேதியுடன் இந்த முன்பதிவு முடிவடையும் எந்த காரணம் கொண்டும் கட்டணத்தை திரும்ப வழங்க முடியாது என்றும் அம்மா எனர்ஜி தர்ஷன் குழு அறிவித்துள்ளது.