டெல்லி: போர் நடைபெற்று வரும் உக்ரைனில் இருந்து இதுவரை 1,464 தமிழக  மாணவர்கள் திரும்பி உள்ளனர் திமுக எம்.பி.  திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு மருத்துவம் படிக்க சென்ற ஆயிரக்கணக்கான தமிழகம் உள்பட இந்திய மாணவர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆபரேஷன் கங்கா மூலம் சிறப்பு விமானங்கள் அனுப்பப்பட்டு, அவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

அதே வேளையில்  உக்ரைனில் சிக்கியுஙள்ள  தமிழக மாணவர்களை மீட்கும் முயற்சியாக, மத்தியஅரசுக்கு உதவும் வகையில், தமிழகஅரசும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய மீட்புக்குழு அமைத்தது. இவ்ர்கள் டெல்லியில் தங்கியிருந்து தமிழக மாணவர்களை மீட்கும்  பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீட்பு குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி.,  “உக்ரைனில் இருந்து இதுவரை 1,464 மாணவர்கள் மீட்கப்பட்டு தமிழகத் துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் 366 பேர் அரசின் துணையின்றி தங்களது சொந்த செலவிலேயே வந்து விட்டனர். 34 மாணவர்களுக்கு ஊருக்கு வர விருப்பம் இல்லை என்று தெரிவித்து உள்ளனர் என்று கூறினார். மேலும்,  இன்று  3 விமானங்கள் உக்ரைனில் இருந்து வருகின்றன. அதில் தமிழக மாணவர்கள் 57 பேர் வர இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.