மிர்தசரஸ்

டந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழக ஐ ஏ எஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜு தோல்வி அடைந்துள்ளார்.

நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.   பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரசை நீக்கி ஆட்சி அமைக்க நினைத்த பாஜகவின் கனவு பொய்த்துப் போனது.    பாஜக ஆட்சி அமைக்கும் என்னும் நம்பிக்கையிலிருந்த  பல வேட்பாளர்கள் அதிர்சசி அடைந்தனர்

டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தலைமை ஆணையராக ஜக்மோகன் சிங் ராஜு என்னும் ஐ ஏ எஸ் அதிகாரி பணி  புரிந்து வந்தார்.  இந்த பதவி தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள பதவி ஆகும்.  ந்ட்ந்து முடிந்த பஞ்சாப் ச்ட்டப்பேர்வை  தேர்தலில் போட்டியிட பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

அதன் பிறகு ஜக்மோகன் பாஜக சார்பில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சித்துவை எதிர்த்துப் போட்டியிட்டார்,.   ஆனால் அவரை எதிர்ப்பு போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.  இந்த தேர்தலில் ஜகமோகன் சிங் ராஜு வெறும் 7,255 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.