டெல்லி: பிரதமர் மோடி தலைமையில்,இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் உக்ரைன் விவகாரம், கச்சா எண்ணை விலை அதிகரிப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. காலை 11மணி அளவில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அங்கிருந்து மீட்கப்பட்டுள்ள மருத்துவ மாணவர்களின் நலன் உள்பட பல்வேறு நிகழ்விகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும், இந்தியாவில் கடந்த 3 மாதங்களை கடந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ள நிலையில், அதை உயர்த்துவது குறித்தும், ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட இருப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
[youtube-feed feed=1]