நியூயார்க்
ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளதாக ஐநா சபையில் இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து இரு வாரங்களாகப் போர் நிகழ்ந்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல நாடுகளும் முயன்று வருகின்றன. சமீபத்தில் நடந்த ஐநா சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியத் தூதர் திருமூர்த்தி கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார்.
திருமூர்த்தி தனது உரையில்,
“அப்பாவி பொதுமக்கள் உக்ரைனில் நடக்கும் போரினால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் இந்திய மாணவர் உள்ளிட்ட பலர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை இரு நாடுகளும் போரை நிறுத்தி விட்டு அமைதியைப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது.
இந்திய பிரதமர் மோடி போரை நிறுத்துவது குறித்து ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன்தனித்தனியாகப் பேசி தனது கருத்தை வலியுறுத்தி உள்ளார். இந்த போரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் சர்வதேச சமூகம் உதவ வேண்டும். ”
எனத் தெரிவித்துள்ளார்.